செய்திகள்

தேர்தல் வருடம், சூப்பர் ஓவர்: கொல்கத்தாவை விடாது துரத்தும் தோல்வி

Published On 2019-03-31 09:15 GMT   |   Update On 2019-03-31 09:15 GMT
இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் வருடத்தில்தான் மூன்று முறை கொல்கத்தா சூப்பர் ஓவரை சந்தித்துள்ளது. மூன்று முறையும் தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. #IPL2019
ஐபிஎல் டி20 லீக் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபில் தொடர் 2009, 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றதால் வெளிநாட்டில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வருடமும் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் ஐபிஎல் தொடரை பிசிசிஐ இந்தியாவிலேயே நடத்தி வருகிறது.

நேற்றைய டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டை’யில் முடிவடைந்தது. இதனால் ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.

சூப்பர் ஓவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மக்களவை தேர்தல் வருடம் ஆகிய மூன்றுக்கு இடையில் ஒற்றுமை உள்ளது. ஆம்!!! 2009-ம் ஆண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சூப்பர் ஓவரை சந்தித்தது. 2014-ம் ஆண்டிலும் சூப்பர் ஓவரை சந்தித்தது. தற்போதும் சூப்பர் ஓவரை சந்தித்துள்ளது.

இந்த மூன்று வருடமும் மக்களை தேர்தல் நடைபெற்ற ஆண்டாகும். இந்த மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
Tags:    

Similar News