ஆன்மிகம்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பிரான்மலையில் பக்தர்கள் இன்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-07-05 04:13 GMT   |   Update On 2021-07-05 04:13 GMT
பிரான்மலை விநாயகர் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து 2 கால யாக பூஜை நடத்தி கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரான்மலை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள சுகம் தரும் விநாயகர் கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து 2 கால யாக பூஜை நடத்தி கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

கொரோனா காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பிரசன்னா குருக்கள் தலைமையில் குழுவினர் யாக வேள்வியை நடத்தினர். நேற்று காலை 10.20 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை பணியாளர்கள், கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News