செய்திகள்
நடிகை சுமலதா

கர்நாடகா இடைத்தேர்தல்: நடிகை சுமலதா யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை

Published On 2019-12-02 06:04 GMT   |   Update On 2019-12-02 06:04 GMT
கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் இந்த விஷயத்தில் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்தாகவும் நடிகை சுமலதா கூறியுள்ளார்.
பெங்களூர்:

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கும் மிக கடுமையான நேரடி போட்டி நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மாண்டியா தொகுதி சுயேட்சை எம்.பி.யான நடிகை சுமலதாவின் ஆதரவு பாரதிய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மாண்டியா தொகுதியில் சுமலதா வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா மறைமுக ஆதரவு தெரிவித்தது. இதனால் சுமலதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக சுமலதா மாறி இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு இல்லை என்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிஇருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் நான் சுயேட்சை எம்.பி.யாக இருக்கிறேன். கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 தொகுதி இடைத்தேர்தலில் எனது ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை. இந்த விஷயத்தில் நடுநிலை வகிக்க நான் முடிவு செய்துள்ளேன்.



இடைத்தேர்தல் நடைபெறஉள்ள 15 தொகுதி மக்களும் புத்திசாலிகள். அவர்களுக்கு யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தெரியும்.
நான் மாண்டியா தொகுதி மக்களுக்காகவும், கர்நாடகா மாநில மக்களுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறேன். பாராளுமன்ற கூட்டத் தொடர் 13-ந்தேதி வரை நடைபெற இருப்பதால் நான் டெல்லியில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளேன்.

எனவே இடைத்தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்கவில்லை. யாருக்காகவும் பிரசாரம் செய்யமாட்டேன்.

இவ்வாறு சுமலதா கூறினார்.
Tags:    

Similar News