செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு நிறைவடைந்தது: இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

Published On 2021-09-12 12:01 GMT   |   Update On 2021-09-12 12:01 GMT
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று மாலை 3, 862 மையங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. 16.14 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு இன்று பிற்பகல் தொடங்கியது. 2 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது.  நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இத்தேர்வை எழுதினர். 

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு முடிவடைந்ததும் தமிழநத்தில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் நிருபர்கள் தேர்வு குறித்து கேட்டனர். அதற்கு பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்வு நடத்தப்பட்டது. கெடுபிடி ஏதும் இல்லை. ஆனால், இயற்பியல் பாட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது எனக் கூறினர். ஒரு சில மாணவர்கள் வேதியியல் பாட கேள்விகளும் கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News