இந்தியா
ஒமைக்ரான் வைரஸ்

ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஒமைக்ரான் வந்து செல்லும்- தலைமை மருத்துவ நிபுணர் சொல்கிறார்

Published On 2022-01-12 06:05 GMT   |   Update On 2022-01-12 08:55 GMT
ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும் என்றும், 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரானால் இந்தியாவில் 3-வது அலை ஏற்பட்டுள்ளது.

28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில்தான் அதிக தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும் என்றும், 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்று நோயியல் துறையின் விஞ்ஞான ஆலோசனை குழுவின் தலைவரும், தொற்று நோயியல் நிபுணருமான டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் கூறியதாவது:-

 


ஒமைக்ரானின் மாறுபாடு கிட்டத்தட்ட தடுக்க முடியாது. அனைவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருக்கும் இந்த நோய் தொற்று நிச்சயமாக வந்து செல்லும்.

ஒமைக்ரானால் ஏற்படும் கொரோனா பாதிப்பால் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால் புதிய திரிபு லேசானது. டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவினாலும், பாதிப்பை ஏற்படுத்தாது.

உலகம் முழுவதும் இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

நம்மில் பெரும்பான்மையானவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அறியமாட்டோம். 80 சதவிதத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு எப்போது ஏற்பட்டது என்பது கூட தெரியாது.

தடுப்பூசிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நாட்டில் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றின் மூலம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும். அதனால்தான் இந்தியா மற்ற நாடுகள்போல் மோசமாக பாதிக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் எந்தவொரு அமைப்பில் இருந்தும், நாங்கள் இதுவரை பூஸ்டர் டோசை பரிந்துரைக்கவில்லை. எனக்கு தெரிந்தபடி முன்னெச்சரிக்கைக்கு பூஸ்டர் டோஸ் பரிந்துரை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... டாஸ்மாக் கடைகளில் வெள்ளிக்கிழமை விற்பனையை அதிகரிக்க முடிவு

Tags:    

Similar News