ஆட்டோமொபைல்
கோப்புப்படம்

இந்தியாவில் வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்கிறது

Published On 2019-07-28 10:51 GMT   |   Update On 2019-07-28 10:52 GMT
இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகப்படுத்த எரிபொருளில் இயங்கும் இரண்டு, நான்கு சக்கர வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்கிறது.



இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக புதிய வாகனங்கள் பதிவு மற்றும் மறு பதிவுக்கான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட உள்ளது. இதன்படி இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.600 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட உள்ளது.



வாகனங்களின் புதுப்பிப்புக் கட்டணம் 2000 ரூபாயில் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் தற்போது ரூ.50 ஆக இருக்கிறது. புதிய விதிகளின் படி இந்த கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.

இதேபோல் லாரி, டிரக், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 2000 ரூபாயில் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தவும் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து, இதற்கான சட்ட வரைவையும் முன்மொழிந்துள்ளது.

அடுத்த 45 நாட்களுக்குள் இந்த புதிய கட்டண கட்டமைப்பு அறிவிக்கப்பட உள்ளது. எனவே இதுபற்றி நாங்கள் அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகங்களின் மறுப்பதிவுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த புதிய விதிகள் அமுலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் வாகனப் பயன்பாடு மக்களிடையே குறைந்து மின் வாகன பயன்பாடு அதிகரிக்கும்.
Tags:    

Similar News