உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நொய்யல் ஆறு உப்பாற்றுடன் இணைப்பு - பா.ஜ.க., வலியுறுத்தல்

Published On 2022-01-07 06:41 GMT   |   Update On 2022-01-07 06:41 GMT
கனிம வளங்கள் மீது அரசு தேவையற்ற மறைமுக தடைகளை விதிப்பதால் கட்டுமான பொருட்களின் விலை உயர்கிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுல்தான்பேட்டை ஒன்றியம் இடையர்பாளையத்தில் பா.ஜ.க. ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஜல்லி, கிரஷர், எம் சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் மீது அரசு தேவையற்ற மறைமுக தடைகளை விதிப்பதால் கட்டுமான பொருட்களின் விலை உயர்கிறது.

தென்னை நார், மட்டை சார்ந்த மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி, தொட்டி மூலம் கரி சுடும் தொழிற்சாலை ஆகியவற்றால் மாசு ஏற்படுவதாக கூறி மேற்கூறிய வெள்ளை பிரிவில் இருந்து ஆரஞ்சு பிரிவுக்கு மாற்றப்பட்டதால் எண்ணற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை பிரிவுக்கு மீண்டும் மாற்றி விதிமுறைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை வேண்டும்.

நொய்யல் நதியை உப்பாறுடன் இணைத்து நீராதாரம் குறைவாக உள்ள இடையர்பாளையம், போகம்பட்டி, கள்ளப்பாளையம், பச்சாபாளையம் பகுதிகளுக்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News