செய்திகள்
கோப்பு படம்

மேற்கு வங்காளத்தில் ருசிகரம் - பணத்தில் கைவைக்காமல் வெங்காய மூட்டைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்

Published On 2019-11-28 16:38 GMT   |   Update On 2019-11-28 16:38 GMT
மேற்கு வங்காளத்தில் காய்கறி கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பணத்தை திருடாமல் வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

நாட்டில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

விலை உயர்வு காரணமாக உணவகங்களில் வெங்காயம் மிகக்குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் வெங்காயங்களை பதுக்கிவைத்து தட்டுப்பாடை ஏற்படுத்தி அதன்மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தின் பசுதேவ்பூர் சந்தை பகுதியில் உள்ள காய்கறி கடையை அதன் உரிமையாளர் இன்று காலை திறந்துள்ளார். அப்போது தனது கடையில் இருந்த வெங்காய மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.



கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 3 மூட்டைகள் இருந்த வெங்காயம், 3 மூட்டைகள் உருளைக்கிழங்கு 100 கிலோ இஞ்சி மற்றும் 90 கிலோ பூண்டு ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். இந்த காய்கறிகளின் மொத்த மதிப்பு 50 ஆயிரம் என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த மர்ம நபர்கள் யாரும் கடையின் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுக்கவே இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் அதிக விலைக்கு விற்கப்பட்டு வரும் வெங்காயம் உள்பட காய்கறிகளை கொள்ளையடிப்பதாகவே இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்காயத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News