செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் - நாளை நடக்கிறது

Published On 2021-09-24 06:50 GMT   |   Update On 2021-09-24 06:50 GMT
கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நேரடியாக நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக சமர்ப்பித்து பயனடையலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை 25-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நேரடியாக நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக சமர்ப்பித்து பயனடையலாம்.

மேலும் விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக் கலை அலுவலர், வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News