உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தென்காசியில் இ-வாடகை செயலி மூலம் வேளாண் எந்திரங்கள்

Published On 2022-01-13 10:00 GMT   |   Update On 2022-01-13 10:00 GMT
தென்காசி மாவட்டத்தில் வேளாண் தொழிலுக்கு தேவையான எந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை செயலியை பயன்படுத்துமாறு கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
தென்காசி:

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் மண் தள்ளும் எந்திரம், உழுவை எந்திரங்கள், மண் அள்ளும் எந்திரங்கள், அறுவடை எந்திரங்கள் மற்றும் வாகனத்தில் இயங்கும் தேங்காய் பறிக்கும் கருவி போன்ற எந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்லாமல் விவசாயிகள் தங்கள் இடத்திலிருந்தே “ இ - வாடகை “ செயலி மூலம் முன் பணம் செலுத்தி விவசாயிகள் முன் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் “ இ -வாடகை Ô செயலியை “ உழவன் “ செயலி வழியாக அணுகி “ வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு Ô தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.

வேளாண் எந்திரங்கள் வாடகை விபரம் தொடர்பான செய்திகள், திட்டங்கள், வாடகை நிபந்தனைகள், கட்டண விபரங்கள் போன்றவற்றை உரிய தெரிவுகளை பயன்படுத்தி அறிய இயலும். வேளாண் எந்திரங்களை முன்பதிவு செய்ய “ வேளாண் எந்திரங்களின் வாடகை முன்பதிவு Ô தெரிவை தேர்வு செய்து பின்னர் பணி செய்ய வேண்டிய இடம் தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். 

விவசாயிகள் தங்களுக்கான எந்திரங்கள் மற்றும் இணைப்புக் கருவிகளை தேர்ந்தெடுத்ததும் பணிக்கான “ கால அளவு “ மற்றும் “ நாள் “ ஆகிய தகவல்களை பதிய வேண்டும். பின்னர் செலுத்த வேண்டிய வாடகை விபரங்கைள செயலி மூலம் அறிந்து, முன் கட்டணம் செலுத்த வேண்டிய தொகை விபரம் அறிந்து “ பணத்தை செலுத்த “ பொத்தானை பயன்படுத்தி “ யு.பி.ஐ. “, “ நெட் பேங்கிங் “, “ கிரெடிட் கார்டு “ மூலம் பணம் செலுத்தி ஒப்புகை சீட்டையும், முன் பதிவு செய்த இயந்திரங்கள் விபரத்தையும் அறிய இயலும். 

தவிர்க்க இயலாத சூழலில் முன்பதிவினை ரத்து செய்ய விரும்பினால் காரணத்தை பதிவு செய்து ரத்து செய்யவும் இயலும். வேளாண் இயந்திரங்களை செயலி மூலம் வாடகைக்கு பெற மண் தள்ளும் இயந்திரத்திற்கு குறைந்தது 8 மணி நேரமும் அதிகபட்சம் 20 மணி நேரமும், டிராக்டர், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரத்திற்கு குறைந்தது 2 மணி நேரமும், அதிகபட்சம் 20 மணி நேரமும் முன்பதிவு செய்ய இயலும் என்ற விபரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 46, ரெயில்வே தொழிலாளர் ரோடு, தென்காசி. 7904025547 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு பயன்பெறவேண்டுமென தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News