செய்திகள்
பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை (மாதிரிப் படம்)

பாகிஸ்தான் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் கழித்து இந்திய குடியுரிமை

Published On 2019-10-04 05:45 GMT   |   Update On 2019-10-04 05:32 GMT
உத்தர பிரதேசத்தில், நீண்ட கால விசாவில் தங்கி இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு 35 ஆண்டுகள் கழித்து இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
முசாபர்நகர்:

உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சையது முகம்மது. இவர் 1984 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணான சுபேதா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த நிலையில் உடனடியாக இந்திய குடியுரிமைக்கு சுபேதா விண்ணப்பித்துள்ளார். ஆனால் அப்போதைய சட்டங்கள் மற்றும் சில அரசியல் காரணங்களால் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது. 

அதன் பிறகு அவர் விசாவை மீண்டும் மீண்டும் புதுப்பித்து நீண்ட கால விசாவில் இந்தியாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 4 தினங்களுக்கு முன்பு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி அவர் இந்திய குடிமகளுக்கான, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம்.

குடியுரிமை வழங்கப்பட்ட சுபேதாவிற்கு வயது 55. அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்திய குடிமகன்களை மணந்த சுமார் 25 பாகிஸ்தான் பெண்கள் முசாபர்நகர் மாவட்டத்தில் நீண்ட கால விசாவில் வசித்து வருகின்றனர் என அரசு தரப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News