செய்திகள்
திருமாவளவன்

மத்திய அரசு பட்ஜெட் பற்றி மக்களிடம் கருத்து கேட்பது நாடகம்- திருமாவளவன்

Published On 2020-01-09 08:56 GMT   |   Update On 2020-01-09 08:56 GMT
மத்திய அரசு பட்ஜெட் பற்றி மக்களிடம் கருத்து கேட்பது நாடகம் என்று மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை:

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து அரசியல் கட்சியினரும், அதனை சாராத நடுநிலையாளர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தான் இயற்றிய சட்டத்துக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு பேரணி நடத்துவது புதுமையாக இருக்கிறது. அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவு தந்ததால்தான் இந்த சட்டம் நிறைவேறி இருக்கிறது. சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அ.தி.மு.க. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மறைமுக தேர்தல் காரணமாக வேட்பாளரை கடத்துவது, சொகுசு விடுதியில் தங்கவைப்பது போன்ற கலாசாரம் ஏற்பட்டு வருகிறது. எனவே தான் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை கூடாது என தெரிவித்து வருகிறோம்.



பா.ஜனதா வேண்டுகோளுக்கு இணங்க அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது கண்டிக்கத்தக்கது.

பட்ஜெட் பற்றி மத்திய அரசு மக்களிடம் கருத்து கேட்பது நாடகம். இன்னும் சில நாட்களில் பாராளுமன்றம் கூடுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் கருத்து கேட்கிறார்கள் என்றால் மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News