தொழில்நுட்பம்
ரியல்மி

இணையத்தில் லீக் ஆன ரியல்மி கியூ சீரிஸ் மாடல் விவரங்கள்

Published On 2021-04-19 04:09 GMT   |   Update On 2021-04-19 04:09 GMT
ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ3 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ரியல்மி கியூ3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 22 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ரியல்மி கியூ3 மாடலும் இதே நிகழ்வில் அறிமுகமாகும் என தெரிகிறது.



அம்சங்களை பொருத்தவரை ரியல்மி கியூ3 ப்ரோ மாடல் திரையின் ஓரத்தில் பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது. பின்புற பேனல் மேட் பினிஷ் மற்றும்  ‘Dare to Leap’ பிராண்டிங் வழங்கப்படுகிறது. செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யூலில் மூன்று சென்சார்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது.

இத்துடன் 6.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் சிம் ஸ்லாட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர், கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News