தொழில்நுட்பம்

மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படி தான் காட்சியளிக்கும்

Published On 2019-03-01 07:57 GMT   |   Update On 2019-03-01 07:57 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. #Motorola



மோட்டோரோலா நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. மோட்டோரோலாவின் சர்வதேச சாதனங்களுக்கான துணை தலைவர் டேன் டெரி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். 

முன்னதாக மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரீதியிலான சிறப்பம்சங்கள் காப்புரிமை விண்ணப்பங்களில் இருந்து வெளியாகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ ரேசர் போன்றே காட்சியளித்தது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாவதை மட்டும் டேன் உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், ரேசர் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



இதன் மூலம் மோட்டோரோலா தனது மடிக்கக்கூடி ஸ்மார்ட்போனினை கோடை காலத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளை சில காலத்திற்கு முன்னதாகவே துவங்கிவிட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதவிர சாம்சங் மற்றும் ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அற்புதமாக இருக்கிறது என்றாலும், மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வித்தியாசமானதாக இருக்கும் என டேன் தெரிவித்தார். மோட்டோ ரேசர் போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவரை வெளியாகி இருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமாக தெரிகிறது. 

மோட்டோரோலா டேப்லெட் சாதனங்களை விற்பனை செய்வதில்லை. இதனால் மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எந்த வகையிலும் டேப்லெட் போன்று பயன்படக்கூடியதாக இருக்காது என கூறப்படுகிறது. மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-ஹின்ஜ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News