செய்திகள்
உலகிலேயே உயரமான சாலை

உலகிலேயே உயரமான சாலை: லடாக்கில் திறந்து வைப்பு

Published On 2021-09-01 02:05 GMT   |   Update On 2021-09-01 02:35 GMT
இதற்கு முன், 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலைதான் உலகிலேயே உயரமான வாகன சாலையாக திகழ்ந்தது.
லே :

லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும், 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகத்திலேயே உயரமான சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் 58 என்ஜினீயர் பிரிவு அமைத்துள்ள இந்த சாலை, கேலா கணவாய் வழியாக செல்கிறது. லே முதல் பாங்காங் ஏரி வரையிலான தூரத்தில் 41 கி.மீ. குறைக்கிறது.

இந்த சாலையை திறந்துவைத்த லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால், இது பொதுமக்கள் பயணிக்கக்கூடிய உலகிலேயே உயரமான சாலையாக இருக்கும். இதற்கு முன், 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலைதான் உலகிலேயே உயரமான வாகன சாலையாக திகழ்ந்தது என்றார்.
Tags:    

Similar News