செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- கமல்ஹாசன்

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- எடப்பாடி, கமல் வாழ்த்து

Published On 2021-04-01 05:25 GMT   |   Update On 2021-04-01 05:25 GMT
51-வது தாதா சாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்தார்.
சென்னை:

இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதாகும். ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், 51-வது தாதா சாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்தார்.


இதையடுத்து தாதா சாகேப் பால்கே விருதை பெறும் ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது தங்களது நடிப்புத்திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என ரஜினிக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

 திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது 100% பொருத்தம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News