உள்ளூர் செய்திகள்
வதான்யேஸ்வரசாமி கோயிலில் குருபெயர்ச்சி விழா.

வதான்யேஸ்வரசாமி கோவிலில் குருபெயர்ச்சி விழா

Published On 2022-04-15 09:55 GMT   |   Update On 2022-04-15 09:55 GMT
மயிலாடுதுறை வதான்யேஸ்வரசாமி கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை டவுன் சேந்தங்குடியில் அமைந்துள்ள வதான்யேஸ்வர சாமி கோவிலில் அதிசார குரு பெயர்ச்சி விழா நடை-பெற்றது. 

இந்த அதிசார குரு பெயர்ச்சி விழாவிற்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்

முன்னிலையில், சிவஸ்ரீ பாலச்சந்திர சிவாச்சாரியார் விஷேச பூஜைகள் செய்தனர். நேற்று அதிகாலை 4. 16 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

இதனை முன்னிட்டு வதான் யேஸ்வரர் கோவிலில் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள அனுக்கிரக தலமான மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க
 
கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. மகா தீபாராதனை மற்றும் பஞ்சமுக தீபாரதனை செய்யப்பட்டது. குருபெயற்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் வள்ளலார் கோவில் சிவ-குருநாத தம்பிரான் கட்டளை விசா-ரணை, கண்காணிப்பாளர் அகோரம், கோவில் தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார், நகரமன்ற உறுப்பினர்

ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மாலையில் பக்தர்கள் பரிகாரங்களுக்காக லட்சார்ச்சனை பூஜைகளும், யாகங்கள் நடைபெற்றது.
Tags:    

Similar News