லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..

பெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..

Published On 2020-09-21 07:32 GMT   |   Update On 2020-09-21 07:32 GMT
முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. அதிலும் இளவயதில் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
பெண்களுக்கு எப்படி வழுக்கை உண்டாகும். தலையில் நடுவில் ஏற்படுமா என்ன என்று கேட்கலாம்.ஆனால் பெண்களுக்கும் வழுக்கை உண்டாகிறது. முன் நெற்றியில், கொத்து கொத்தாக முடி உதிர்வு உண்டாகும் போது இதுவும் வழுக்கையாகத்தான் கணக்கில் கொள்ளப்படும்.

முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. அதிலும் இளவயதில் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

பெண் பிள்ளைகள் சிறுவயது முதலே சீரான சமச்சீரான உணவு எடுத்துகொண்டாலும் கூட பூப்படையும் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு பாதிக்காமல் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக இருந்துவிட்டால் அவை உடலையும் கூந்தலையும் பாதிக்காது.

அப்படி ஆரோக்கியமாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கே பூப்படைந்த காலத்தில் ஹார்மோன் சுரப்பில் முடி கொட்டுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் குறைபாடு ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் இவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். அதனாலும் முடி கொட்டுவது தீவிரமாகி இளவயதில் வழுக்கை உண்டாகலாம்.

பெண்களுக்கு பூப்படைந்த காலத்துக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாவது போன்றே கர்ப்பக்காலத்திலும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாகும். இது கர்ப்பக்காலம் தொடங்கி பேறுகாலம் வரையிலும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை இருக்கும்.

குறிப்பாக பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் உள்ளுறூப்புகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஹார்மோன் சீரான சுரப்பு உண்டாகும் வரை அவை முடி உதிர்வை உண்டாக்க கூடும். இதை தவிர்க்க முயாலாத அளவுக்கு உடல் பலவீனமாகும் போதும் வழுக்கை உண்டாக வாய்ப்புண்டு.

சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை பாதிப்பு நேரும் போது அவை பெருமளவு முடி உதிர்வை உண்டாக்கிவிடக்கூடும். தைராய்டின் அறிகுறிகளில் முடி உதிர்வும் ஒன்று. தைராய்டு இல்லாத நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தாலோ அல்லதுகருப்பையில் ஓவரியை சுற்றி ஏற்படும் சில குறைபாடுகளாலோ உண்டாகக்கூடிய பாதிப்புகளில் முடி உதிர்வும் ஒன்று.

ஹார்மோன் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அவை முடி உதிர்வை ஊக்குவிக்க கூடியவை. அதனால் ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் குறைபாடுகளை காலதாமதமில்லாமல் சரி செய்துவிட வேண்டும். இல்லையெனில் தீவிரமான முடி உதிர்வும், அதை தொடர்ந்து வழுக்கையும் உண்டாகிவிடக்கூடும்.

உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று கூந்தல் பிரச்சனைக்கும் ஊட்டச்சத்து தேவை உடலில் இந்த சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை கூந்தலிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிக குறைபாடு கால்சியமும் அதைதொடர்ந்து இரும்புச்சத்தும் தான்.

இந்த ஹீமோகுளோபின் குறைபாடால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகம் குறைவாக இருந்தால் அவை நிச்சயம் முடி உதிர்வை உண்டாக்கி தீவிரமாகும் போது வழுக்கை பிரச்சனையை உண்டாக்கும்.

குழந்தைப்பேறை தள்ளிப்போட கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளும் போது ஹார்மோன் சுரப்பை மருந்துகளால் மாற்றம் செய்யும் போது இது முடி உதிர்வை அதிகமாக ஊக்குவிக்கிறது. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை ஆண்டுக்கணக்காக பயன்படுத்தும் போது வழுக்கையும் வேகமாக உண்டாகிறது.
Tags:    

Similar News