ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு

பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு இன்று முதல் மீண்டும் தொடக்கம்

Published On 2021-02-08 04:52 GMT   |   Update On 2021-02-08 04:52 GMT
பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கை ஏற்று இன்று (திங்கட்கிழமை) முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு தொடங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு ஆகியவை நிறுத்தப்பட்டது. தங்க தொட்டில் வழிபாடு என்பது, குழந்தைகள் நோயில் இருந்து நீங்கி ஆரோக்கியமாக வாழ பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்க தொட்டிலில் குழந்தைகள் வைத்து ஆட்டப்படுவர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு தொடங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள தங்க தொட்டில் வழிபாட்டு முறையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News