செய்திகள்
கோடை வெயில்

கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

Published On 2021-05-04 08:57 GMT   |   Update On 2021-05-04 08:57 GMT
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியதை தொடர்ந்து சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மயிலாடு துறை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும்.



6, 7, 8 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம், தென் தமிழகம், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் உள்ளதால் காற்றின் இயல்பான வெப்ப நிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

இதன் காரணமாக பிற்பகல் முதல் காலை வரை வெப்பம் அதிகமாக காணப்படும். புழுக்கம் அதிகமாக இருக்கும்.சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பமும், புழுக்கமும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியதை தொடர்ந்து சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.


Tags:    

Similar News