வழிபாடு
வைகுண்ட ஏகாதசி

முக்கோடி ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி

Published On 2022-01-13 06:38 GMT   |   Update On 2022-01-13 06:38 GMT
மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன் மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவா சல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு காட்சியளித்து அவர்களை காத்தருளினாராம். இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாத சிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது என்றும், துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன் மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவா சல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
Tags:    

Similar News