செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு

Published On 2021-04-09 06:07 GMT   |   Update On 2021-04-09 06:07 GMT
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது.
சென்னை:

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே குறைந்தபடி உள்ளது. இதனால் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

கடந்த மாதம் தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே விலை உயர்ந்தபடியே இருந்தது. கடந்த 2-ந்தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து விலை உயர்ந்தபடியே இருந்தது.

இந்தநிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 96-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 387 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.72 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10-க்கு விற்கிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1032 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது.

இதையடுத்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News