செய்திகள்
வாழைஇலை

திண்டுக்கல்லில் வாழைஇலை விலை கிடு,கிடு உயர்வு

Published On 2021-02-19 20:29 GMT   |   Update On 2021-02-19 20:29 GMT
வரத்து குறைவால் திண்டுக்கல்லில் வாழைஇலை விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கட்டு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் குடகனாறு சுற்று வட்டார பகுதிகளான சித்தையன்கோட்டை, மைலாப்பூர், ஆத்தூர், அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை சாகுபடி பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

ஆனால் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வாழை மரங்கள், இலைகள் அதிக அளவில் சேதமடைந்தன. இதனால் திண்டுக்கல்லில் உள்ள வாழை இலை மொத்த விற்பனை கடைகளுக்கு வரத்து குறைந்தது.

இதன் காரணமாக இலைகளின் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்பட்ட 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு, தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.
Tags:    

Similar News