செய்திகள்
துர்கா ஸ்டாலின்

5 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று சமயபுரம் மாரியம்மனை வழிபட்ட துர்கா ஸ்டாலின்

Published On 2021-10-07 05:19 GMT   |   Update On 2021-10-07 05:19 GMT
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்தார்.
திருச்சி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காரில் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். பின்னர் அவர் சமயபுரம் அருகே இருங்களூர் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் காரில் இருந்து இறங்கினார்.

இதையடுத்து சென்னை- திருச்சி நெடுஞ்சாலை வழியாக சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், கடைவீதி, சன்னதி வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சமயபுரம் மாரியம்மன் கோவிலை இரவு 7.20 மணிக்கு சென்றடைந்தார்.

அதைதொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துவிட்டு அங்குள்ள கொடிமரத்தை வணங்கிய பின் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதில் மண்ணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவன் உடனிருந்தார். கோவில் இணை ஆணையர் சி. கல்யாணி, திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

இந்த நிலையில் மீண்டும் இன்று(வியாழக்கிழமை) காலை துர்கா ஸ்டாலின் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்தார். வேண்டுதலை நிறைவேற்ற அவர் சாமிதரிசனம் செய்ததாக கூறப்பட்டது.
Tags:    

Similar News