செய்திகள்
மோடி

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது வரலாற்றின் புது அத்தியாயம்: பிரதமர் மோடி உரை

Published On 2021-10-22 04:54 GMT   |   Update On 2021-10-22 12:36 GMT
100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என பிரதமர் மோடி உரையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இமாலய சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1. இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

2. மருந்து உற்பத்தி மையம் என்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. 

3. 130 கோடி மக்களின் சக்தியும் அடங்கியுள்ளது. அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். 

4. இந்தியாவால் இவ்வளவு பெரிய சாதனையை செய்ய முடிந்தது என்று உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

5. இந்தியா வெளிநாட்டில் இருந்து தடுப்பூசிகளை வாங்கி 130 கோடி மக்களுக்கு செலுத்துமா? அதற்கான பணத்தை செலவழிக்குமா? எப்படி செலுத்தும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 100 கோடி தடுப்பூசி செலுத்தி பதில் அளிக்கப்பட்டுள்ளது.

6. இந்தியா கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட நாடாக அறியப்படுகிறது.

7. உலகம் இந்தியாவின் வலிமையை உணர்ந்திருக்கிறது.

8. முகாம், அனைவருடைய முயற்சி, ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைந்து இந்த சாதனையை அடைய முடிந்தது.

9. பெரிய ஆட்களாக இருந்தாலும் சாதாரண மனிதர்களை போன்றுதான் தடுப்பூசி பாகுபாடு பார்க்காமல் செலுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News