செய்திகள்
திமுக

பெரம்பலூர் தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பின் வெற்றியை ருசித்த திமுக

Published On 2021-05-04 10:05 GMT   |   Update On 2021-05-04 10:05 GMT
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வும், திமுக கூட்டணி சார்பில் சமூக சமத்துவ படையும் மோதின. இதில் அதிமுக வெற்றி பெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அந்த கட்சி 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், இந்திய பொதுவுடமை கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 1977, 1980, 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக மோதின. இதில் 4 முறை அ.தி.மு.க.வும், 3 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றன. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணி சார்பில் சமூக சமத்துவ படையும் மோதின. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

ஆனால் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக மோதின. இதில் தி.மு.க. வேட்பாளர் பிரபாகரன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News