செய்திகள்
டெஸ்ட் கோப்பையுடன் இந்தியா, நியூசிலாந்து அணி கேப்டன்கள்

கான்பூர் டெஸ்ட்- இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Published On 2021-11-25 04:05 GMT   |   Update On 2021-11-25 04:05 GMT
முழங்கை காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கியிருக்கும் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், இந்த போட்டி தனக்கு ஒரு வித்தியாசமான சவாலாக இருக்கும் என்று கூறி உள்ளார்.
கான்பூர்:

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. கான்பூரில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங்கிறகு ஒத்துழைக்கும் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார் கேப்டன் ரகானே. மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.  

நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், முழங்கை காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கியிருக்கிறார். இந்த போட்டி தனக்கு ஒரு வித்தியாசமான சவாலாக இருக்கும் என்று கூறி உள்ளார். ரச்சின் ரவீந்திரா அறிமுக வீரராக களமிறங்குகிறார். அஜாஸ் படேல் மற்றும் வில் சோமர்வில்லே ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி: மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

நியூசிலாந்து அணி:  டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ்,  டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், வில் சோமர்வில்லி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல்.
Tags:    

Similar News