ஆன்மிகம்
குகநாதீஸ்வரர் கோவில்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் இன்று நடக்கிறது

Published On 2020-10-31 09:19 GMT   |   Update On 2020-10-31 09:19 GMT
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியான இன்று (சனிக்கிழமை) குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் .அதேபோல இந்த ஆண்டு ஐப்பசி பவுர்ணமியான இன்று (சனிக்கிழமை) குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு அபிஷேகமும், 8 மணிக்கு தீபாராதனையும் 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் 10.30 மணிக்கு குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் எம்.கோபி தலைமையில் நடந்து வருகிறது.

இதேபோல கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசிவிஸ்வநாதர் கோவிலிலும், வடக்குதாமரைகுளம் பெரியபாண்டீஸ்வர உடையநைனார் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.
Tags:    

Similar News