தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு லைட் விலை இவ்வளவு தானா?

Published On 2020-05-13 08:55 GMT   |   Update On 2020-05-13 08:55 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவு தான் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் பெரிய வெளிப்புற டிஸ்ப்ளே, அதிக உறுதியான மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா சென்சார்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் மற்றொரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.



இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஃபோல்டு லைட் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இது விலை குறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை 1099 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 82,800 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போன் வின்னர் 2 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 256 ஜிபி மெமரி, மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 5ஜி வசதி வழங்கப்படாது என தெரிகிறது.

கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் அலுமினியம் மற்றும் கிளாஸ் கொண்டு உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மெயின் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மிக மெல்லிய கிளாஸ் மூலம் உருவாக்கப்படும் என தெரிகிறது. மேலும் வெளிப்புறம் இருக்கும் இரண்டாவது டிஸ்ப்ளே சற்று சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News