லைஃப்ஸ்டைல்

எடை தூக்கும் பயிற்சி ஏன் முக்கியமானது?

Published On 2019-06-27 03:47 GMT   |   Update On 2019-06-27 03:47 GMT
நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்னைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.
நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்ளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகளும், சாதாரண உடற்பயிற்சிகளும் நம் உடல் தசைகள் எடுத்து கொள்ளும் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, இதயமும், நுரையீரலும் நன்கு செயல்பட உதவி புரிபவை. ஆனால், எடையைத் தூக்கி செய்யப்படும் பயிற்சிகள் தளர்வடைந்த தசைகளை இறுக்கமடைய செய்யும் திறன் கொண்டவை. நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்னைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.

நம் உடலின் ஒவ்வொரு பகுதி தசைக்கும், அதன் எடையை விடவும் அதிக எடை கொண்ட உபகரணங்களின் மூலம் எடை தூக்கும் பயிற்சிகள் செய்வதால் தசைகள் நன்கு வலுப்படும். இந்த எடை தூக்கும் பயிற்சிகள் பெண்களுக்கு அதிகப்படியான நன்மையை கொடுப்பவை. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் குறைவு என்பதால், வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும், எலும்பின் அடர்த்தியை மேம்படுத்தவும் இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன.

மேலும் உடலுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கவும் எடை தூக்கும் பயிற்சிகள் அவசியம். இத்தனை முக்கியத்துவம் பெற்ற எடை தூக்கும் பயிற்சிகளில், Weight Plate Excercise மிகவும் முக்கியமானது. இதனை உடற்பயிற்சி நிபுணரிடம் முறையாகப் பயிற்சி பெற்ற பின்னர் வீட்டிலேயும் செய்யலாம்

Overhead  Press Squat Jack

செய்முறை A. காலை சிறிது அகட்டி இடுப்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும். வெயிட் பிளேட்டை இரு கைகளிலும் பிடித்து, முழங்கைகளை மடக்கி மார்புக்கு நேராக வைத்துக் கொண்டு நிற்கவும். B. பின் ஒரு ஜம்ப் செய்து கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டி, படத்தில் காட்டியுள்ளவாறு, உட்காரும் நிலையில் வைத்துக் கொள்ளவும். வெயிட் பிளேட்டை தலைக்கு மேல் தூக்கியவாறு வைக்கவும். அப்படியே பழைய நிலைக்குத் திரும்பி நேராக நிற்கவும். இதேபோல 5 முதல் 8 முறை செய்யலாம்.

பலன்கள்

முழு உடலின் தசைகளுக்கு வலிமை அதிகரிக்கும். இடுப்பு, தொடைப்பகுதிகளில் உள்ள அதிகப் படியான கொழுப்பை விரைவில் எரிக்க முடியும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தொடை, இடுப்புகளில் உள்ள செல்லுலைட் எனப்படும் கொழுப்பு கட்டிகளை கரைக்க உதவுகிறது.இடுப்பு, எலும்புகள், தசைகள், மற்றும் நரம்புகளுக்கு நெகிழ்ச்சித்தன்மை கிடைக்கிறது. தோள்பட்டை, கைகள் வலுவடைகின்றன. கைகளில் தொங்கும் கொழுப்பு தசைகள் குறைகிறது. அழகிய உடல் வடிவமைப்பு பெற உதவுகிறது.
Tags:    

Similar News