தொழில்நுட்பம்
சியோமி

இணையத்தில் லீக் ஆன சியோமி 12 விவரங்கள்

Published On 2021-10-31 03:45 GMT   |   Update On 2021-10-30 15:18 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


சியோமி 12 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. சீனாவின் வெய்போ தளத்தில் சியோமி 12 புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய புகைப்படங்களின் படி புதிய சியோமி 12 தோற்றத்தில் நீளமாக காட்சியளிக்கிறது. 

மேலும் சியோமி 12 சிறிய பன்ச் ஹோல் டிசைன், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தெரிகிறது. 



முந்தைய தகவல்களின்படி சியோமி 12 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இதுதவிர குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக சியோமி 12 இருக்கும் என கூறப்படுகிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News