செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

ஆண்டிபாளையத்தில் குளத்தில் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-14 08:39 GMT   |   Update On 2021-11-14 08:39 GMT
தற்போது மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் கட்ட மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் ஆண்டிபாளையம் சிறிய குளத்தின் 7.52 ஏக்கர் நிலத்தை குளம் என்பதை மறைத்து   திருப்பூர் மாநகராட்சி சார்பில் ரூ.29.3 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைத்து வருகின்றனர்.

இந்த கட்டிடம் பாதி வேலை நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையில் அரை அடி மண்ணில் கட்டிடம் புதைந்து ஆங்காங்கே விரிசலுடன் இடிந்து நின்றது. 

இதனையடுத்து குளத்தில் மாநகராட்சி கட்டிடம் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மண்ணில் புதைந்த கட்டிடத்தை மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு இடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அக்கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில்  கட்டிடம் கட்ட மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருவதை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் கட்சி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் குளத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News