ஆன்மிகம்
முருகன்

தென்கரையில் கந்த சஷ்டி விழா 15-ந்தேதி தொடங்குகிறது

Published On 2020-11-12 07:41 GMT   |   Update On 2020-11-12 07:41 GMT
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. காலை 9 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி சன்னதி முன்பாக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்குகின்றனர்.

20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை 5 மணியளவில் கோவில் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெறும். 6 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பாவாடை தரிசனம், மாலை 4 மணி அளவில் திருக்கல்யாணம், இரவு அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினசரி சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்து வருகின்றனர். முக கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News