செய்திகள்
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் பிரசாரம்

Published On 2019-10-05 01:26 GMT   |   Update On 2019-10-05 01:26 GMT
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ந்தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி நாங்குநேரியில் 23 பேரும், விக்கிரவாண்டியில் 12 பேரும் போட்டியிடுகிறார்கள்.

இந்தநிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து வருகிற 13, 14 மற்றும் 17-ந்தேதிகளிலும், நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து 15, 16 மற்றும் 18-ந்தேதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News