செய்திகள்
காசிமேடு மீன் மார்க்கெட்

கொரோனா அச்சம் இல்லை... காசிமேடு மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்

Published On 2021-04-11 07:08 GMT   |   Update On 2021-04-11 07:08 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
சென்னை:

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை பகுதிகள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.



புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தபோதும், வர்த்தக பகுதிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியமாகவே உள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சென்னை காசிமேடு துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட்டில் மீன் பிரியர்கள் மீன் வாங்குவதற்காக காலையிலேயே குவிந்தனர். கொரோனா குறித்த அச்சம் இன்றி, மக்கள் சமுக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக வந்ததை காண முடிந்தது. இதனால் கொரோனா மேலும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிலர் முககவசம் அணியாமலும் வந்து மீன்களை வாங்கி சென்றனர்.
Tags:    

Similar News