செய்திகள்
டெங்கு காய்ச்சல்

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பாதிப்பு

Published On 2020-01-16 03:38 GMT   |   Update On 2020-01-16 03:38 GMT
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த சுகாதார துறையும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காங்கயத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, தென்னம்பாளையம் 10 வயது சிறுவன், முதலி பாளையம் 12 வயது சிறுமி என 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News