செய்திகள்
அமித் ஷா

அவதூறு வழக்கு: ஆஜராகும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன்

Published On 2021-02-19 11:22 GMT   |   Update On 2021-02-19 11:22 GMT
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியை அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அமித் ஷாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி அவதூறு பரப்பு வகையில் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி தலைமையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, வருகிற 22-ந்தேதி அமித் ஷா நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் அவரது வக்கீல் மூலமாக அஜராகலாம் என நீதிபதி தெரிவித்து சம்மன் அனுப்பியுள்ளார்.

மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு பரப்பும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News