உள்ளூர் செய்திகள்
.

பயணிகளை ஏற்றுவதில் போட்டி- அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியது

Published On 2022-05-07 09:57 GMT   |   Update On 2022-05-07 09:57 GMT
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அரசு டவுன் பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
காரிமங்கலம், 

பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் பெரியாம்பட்டி அடிலம் சப்பானிபட்டி வழியாக அரசு டவுன் பஸ் மாணவர்களுக்காக சென்று வருகிறது.

 அந்த பஸ் காரிமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்று நின்று கொண்டிருந்தது. அந்நேரம் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற தனியார் பஸ்சும் காரிமங்கலம் பஸ் நிலையத்துக்கு வந்துள்ளது. 

அப்போது அரசு டவுன் பஸ்சை மப்சல் பஸ் என நினைத்துக்கொண்டு பயணிகளை ஏற்றுவதை தடுக்கும் நோக்கில வேகமாக வந்த அரசு டவுன் பஸ்சை முந்த முயன்றார்.

அப்போது தனியார் பஸ்சின் பக்கவாட்டு அந்த பஸ்சின் முன்புறம் மோதி நின்றது. இதனால் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்சில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 
பயணிகளை ஏற்றுவது தொடர்பான போட்டி யால் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர் கண்டக்ட ர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று இரண்டு பஸ்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News