செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-29 01:30 GMT   |   Update On 2020-10-29 01:30 GMT
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 75 ஆயிரத்து 190 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,248 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

14 ஆயிரத்து 957 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,905 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. ஒரு முகாமில் 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 108 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநில பட்டியலின் படி 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட சுகாதார துறை விருதுநகர் மற்றும் நெல்லை மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையங்களில் இருந்து வந்த பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது.

இதன்படி கிராமப்புறங்களிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டத்தில் 1,932 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,905 பேர் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News