செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்வராக 5-ந்தேதி பதவி ஏற்கிறார் மம்தா பானர்ஜி

Published On 2021-05-03 12:31 GMT   |   Update On 2021-05-03 12:31 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 213 இடங்களை பெற்று அபார வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்கிறது.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா கடும் நெருக்கடி கொடுக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்பிலும் பா.ஜனதா சவால் விடும் அளவிற்கான இடங்களை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மம்தா பானர்ஜி தனி ஒருவராக நின்று பா.ஜனதா தலைவர்கள், தேர்தல் ஆணையம் ஆகியவற்றை எதிர்த்து கடுமையாக போட்டியிட்டார்.

இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் ஏகபோக முன்னிலை பெற்று, இறுதியாக 213 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனா 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கு இடங்களை பிடித்துள்ளது.

நந்திகிராமில் சுவெந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டு 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இருந்தாலும் அவர் முதல்வராக பதவி ஏற்ற பின், வேறொரு தொகுதியில் நின்று வெற்றி பெற தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி வருகிற 5-ம் தேதி (நாளைமறுதினம்) முதல்வராக பதவி ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
Tags:    

Similar News