செய்திகள்
ஜிகே வாசன்

நெசவாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

Published On 2021-06-18 04:40 GMT   |   Update On 2021-06-18 04:40 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல கட்ட ஊடரங்கு அமலில் உள்ளதால் பல்லாயிரக்கணக்கான நெசவு தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல கட்ட ஊடரங்கு அமலில் உள்ள இந்த வேளையில் பல்லாயிரக்கணக்கான நெசவு தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெசவு கூடங்கள் இயங்காததாலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேக்க நிலையில் உள்ளதாலும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாலும் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் அளித்தால் விற்பனை அதிகமாகும், பொருட்களின் தேக்க நிலை ஏற்படாது. இதனால் உற்பத்தியாளர்களும், நெசவு தொழிலாளர்களும் பெரிதும் பயன்பெறுவர். அதோடு இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களது வாழ்வாதாரம் ஓரளவிற்காவது சமன் செய்திட அவர்களுக்கு அரசு நிவாரண தொகையாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News