செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொடி

திரிணாமுல் காங்கிரஸ் என்பது பயங்கரவாதிகள் தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது - பாஜக தலைவர் பேச்சு

Published On 2020-11-30 12:30 GMT   |   Update On 2020-11-30 12:30 GMT
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) என்பது பயங்கரவாதிகள் தயாரிப்பு நிறுவனமாகியுள்ளதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் முக்கிய கட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தற்போதில் இருந்தே தேர்தல் தொடர்பான பிரசார நிகழ்ச்சிகள், பொதுகூட்டங்கள் நடத்த தொடங்கிவிட்டன.

இந்நிலையில், அம்மாநில பாஜக துணைதலைவர் ராஜூ பானர்ஜி இன்று தேர்தல் தொடர்பான பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு காலத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) என்பதன் பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது TMC (திரிணாமுல் காங்கிரஸ்) என்பது பயங்கரவாதிகள் தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது( TMC - Terrorist Manufacturing Company). 

அப்படித்தான் இளைஞர்களும் கருதுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் அப்படித்தான் நினைக்கின்றனர். ஆகையால், அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்) 2021-ம் ஆண்டு  திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என கல்லறைகளின் சுவர்களில் எழுதிக்கொண்டுகொண்டிருக்கின்றனர்.

என்றார்.
Tags:    

Similar News