தமிழ்நாடு
கன்னியாகுமரி கடலில் கப்பலில் அடிபட்டு இறந்த நிலையில் ராட்சத கடல் ஆமை ஒன்று மிதந்ததை படத்தில் காணலாம்

கப்பலில் அடிபட்டு இறந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் மிதந்து வந்த ராட்சத ஆமை

Published On 2022-01-13 08:19 GMT   |   Update On 2022-01-13 08:19 GMT
கடலில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோசமாக வீசியதால் கடல் ஆமை அலையில் சிக்கி கரைக்கு வர முடியாமல் மிதந்து கொண்டிருந்தது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடல்பகுதியில் காந்தி மண்டபத்துக்கு பின்புறம் நேற்று மாலை கப்பலில் அடிபட்டு இறந்த நிலையில் ராட்சத கடல் ஆமை ஒன்று மிதந்த நிலையில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

கடலில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோசமாக வீசியதால் அந்த ராட்சத கடல் ஆமை அலையில் சிக்கி கரைக்கு வர முடியாமல் மிதந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த சுற்றுலா போலீசார் ராட்சத கடல் ஆமை ஒன்று கப்பலில் அடிபட்டு கடலில் மிதந்து வந்ததைப் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் கடலில் இறங்கி அந்த ராட்சத கடல் ஆமையை மீட்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
Tags:    

Similar News