ஆட்டோமொபைல்
ஜாகுவார் லேண்ட் ரோவர்

என்ஜின் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த ஜாகுவார் லேண்ட் ரோவர்

Published On 2020-07-18 10:38 GMT   |   Update On 2020-07-18 10:38 GMT
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இன்ஜெனியம் ரக என்ஜின் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் இதுவரை 15 லட்சத்திற்கும் அதிக இன்ஜெனியம் ரக என்ஜின்கள் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட இன்ஜெனியம் என்ஜின் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  

முதற்கட்டமாக 4 சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜினும், 2016 ஆம் ஆண்டு முதல் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உற்பத்தி துவங்கியது. பின் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் உற்பத்தி விவரங்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 



ஜாகுவார் ஐ பேஸ் மாடல் அறிமுகமானது முதல் இந்த ஆலையில் எலெக்ட்ரிவ் டிரைவ் யூனிட்களின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. 

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இரண்டு வடிவமைப்பு, பொறியியல் தளங்கள், மூன்று வாகன உற்பத்தி ஆலைகள், மற்றும் இரண்டு பவர்டிரெயின் உற்பத்தி ஆலைகளை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் வைத்திருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியம் மட்டுமின்றி இந்தியா, சீனா, பிரேசில், ஆஸ்த்ரியா மற்றும் ஸ்லோவோகியா போன்ற பகுதிகளிலும் வாகன ஆலைகளை வைத்திருக்கிறது. 
Tags:    

Similar News