செய்திகள்
அமைச்சர். மு.பெ.சாமிநாதன் பரிசு வழங்கப்பட்டகாட்சி.

தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து புத்தகம் பரிசு

Published On 2021-09-12 08:16 GMT   |   Update On 2021-09-12 08:16 GMT
மணி மண்டபத்திற்காக ரூ.2 கோடியே 60 லட்சம் தொகையை ஒதுக்கீடு செய்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உடுமலை:

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபக்கோரிக்கையை நிறைவேற்றி தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மணி மண்டபத்திற்காக ரூ.2 கோடியே  60 லட்சம் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை நிறைவேற்றியதுடன் அதற்கான தொகையும்  ஒதுக்கி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து உடுமலை வந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி எழுதிய திருமூர்த்திமண் என்ற  நூலை பரிசளித்து, பொன்னாடை அணிவித்து நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் குமாரராஜா, துணைத்தலைவர்கள் வி.கே.செல்வராஜ், ராஜாசுந்தரம், செயலாளர் வி. கே.சிவக்குமார், மதிப்புரு தலைவர்கள் முனைவர் கற்பகவள்ளி, நல்லாசிரியர் விஜயலட்சுமி,  இணைச்செயலாளர் ராபின் ஆகியோர் அமைச்சருக்கு  வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும்  திராவகம் சிதைத்த வாழ்வு எனும்  நூலினை  முனைவர் ப.கற்பகவள்ளி அமைச்சருக்கு வழங்கினார்.
Tags:    

Similar News