செய்திகள்
இனிப்பு வழங்கி மகிழ்ந்த கிராம மக்கள்

கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்

Published On 2020-11-08 03:47 GMT   |   Update On 2020-11-08 03:47 GMT
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தின் மன்னார்குடி அருகே அவரது சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மன்னார்குடி:

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ்(வயது 55) வெற்றி பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட்டதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்து ஆதரவு தெரிவித்தனர். வீடுகளின் முன்பு ரங்கோலி வரைந்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தி அறிந்ததும், துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News