செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசி 3 மாதத்துக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் - ஆய்வில் தகவல்

Published On 2020-12-04 11:09 GMT   |   Update On 2020-12-04 11:46 GMT
அமெரிக்காவின் மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரசை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது.

இந்த நிலையில் மாடர்னா நிறுவன தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் முதல் கட்டத்தில் இருந்து 34 தன்னார்வலர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்தனர். இதில் கொரோனா வைரசை தடுக்கும் ஆண்டிபாடிகள் மனித அணுக்களில் இருந்து வெளியானது தெரியவந்தது.

எதிர்பார்த்தபடி காலப்போக்கில் அந்த ஆண்டிபாடிகள் சற்று குறைந்தன. ஆனால் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களுக்கு அனைத்து தன்னார்வலர்களிடமும் உயர்ந்த வண்ணம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு எம்.ஆர்.என்.ஏ.-1273 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து 2 டோஸ்களாக 28 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்படும்.

Tags:    

Similar News