உள்ளூர் செய்திகள்
புதர்மண்டி கிடக்கும் மயானம்

அரவேணு பகுதியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் மயானம்

Published On 2022-04-15 10:54 GMT   |   Update On 2022-04-15 10:54 GMT
பொது மயானம் பல வருடங்களாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.
அரவேணு: 

கோத்தகிரி தாலுகா அரவேணு பகுதியை சுற்றி அரவேணு பஜார், காமராஜர் நகர், என்.பி.நகர், அளக்கரை சாலைப் பகுதி, தவிட்டு மேடு கீழ்கைத்தளா, புதூர், மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது.

இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கான பொது மயானம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் உள்ளது. இந்த பொது மயானம் பல வருடங்களாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.

இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுவரையிலும் நடைபாதை, சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி எதுவும் இல்லாமல் புதர் மண்டி கிடைக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள பொதுமயானம் பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி புதர்மண்டியே காணப்படுகிறது. பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நடந்து செல்லும் நடைபாதை கூட புதர் மண்டி கிடக்கிறது. 

எனவே மயானத்திற்கு செல்லும் நடைபாதைகளை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து கிராம மக்களும் சுற்றுச்சுவர் கட்டி, மின்விளக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News