செய்திகள்
முகமது பின் சல்மான்

துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதி அரேபியா முடிவு

Published On 2020-10-23 08:06 GMT   |   Update On 2020-10-23 08:06 GMT
துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதிஅரேபியா முடிவு செய்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
ரியாத்:

பத்திரிகையாளர் ஜமால் கசோகி சவுதி அரேபியாவில் துருக்கி தூதரகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பின்னர், மோதல் போக்கு நீடித்து வருகிறது.

துருக்கியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஜவுளி உள்ளிட்ட பொருட்களும் இறக்குமதி செய்யாமல் தாமதம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் மார்கெட் கடைகளில் அனைத்து துருக்கி பொருட்களை விற்பனை செய்யாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

அதன் பின்னணியில் சவுதி அரசு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பொருளாதாரம் நலிவடைந்துள்ள துருக்கி அரசுக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News