செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

சட்டசபையில் ரூ.6580.15 கோடிக்கு துணை மதிப்பீடு தாக்கல்- ஓ.பன்னீர்செல்வம் தகவல்

Published On 2020-01-09 07:21 GMT   |   Update On 2020-01-09 07:21 GMT
தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான 2-ம் துணை மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.6580.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2019-2020-ம் ஆண்டுக்கான 2-வது துணை மதிப்பீடுகளை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2019-2020-ம் ஆண்டுக்கான 2-ம் துணை மதிப்பீடுகளை இம்மன்றத்தில் முன் வைக்கிறேன்.

இதில் ரூ.6580.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்க தொகை வழங்க அரசு ரூ.2363.13 கோடி அனுமதித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிக பாதிப்பு அடைய கூடிய கரையோர பகுதிகளில் நீண்டகால வெள்ள நிவாரண பாதுகாப்புக்கு அரசு ரூ.290.78 கோடி அனுமதித்துள்ளது.

கோவை விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்குவதற்காக மேற்கொள்ள நிலம் எடுப்புக்காக இழப்பீட்டு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்க ரூ.189.30 கோடியை அனுமதித்துள்ளது.

சென்னை- கன்னியா குமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் இரண்டு மின்தொடர் அமைப்பு திட்டங்களை நிறுவ அரசு ரூ. 4332.57 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்துக்காக துணை மதிப்பீடுகளில் மொத்தம் 108 கோடி ரூபாய் எரிசக்தி துறைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News